ஊழ்க
சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்தான்
உயிர்
நண்பன் பெருமான்
சைக்கிளைப்
பற்றியவாறே கூடவே ஓடி வந்தான்
எதிர்ப்பக்கம்
சாய்ந்தபோது ”பெருமானே” என்று கத்தினேன்
”இருக்கிறேன்”
இழுத்து சமன் செய்தான்.
அவன்பக்கம்
சாய்ந்துபோது எடையைத் தாங்கி நிமிர்த்தி
”சாய்வின்றி
நேர் செல்” என்றான்.
பரவசத்தின்
ஒரு கணம் நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டேன்
பேரச்சத்தின்
மறுகணம் அவன் இல்லை நான் தனித்து சென்று கொண்டிருக்கிறேன்
”பெருமானே”
அலறத் தொடங்கினேன்.
”என்னை
எண்ண வேண்டாம் தொடர்ந்து செல்” பின்னால் தூரத்தில் இருந்து பெருமானின் குரல்.
”இல்லை
என்னால் முடியாது”
என்
ஊழ்க சைக்கிள் பள்ளத்தில் சரிந்து விழத் தொடங்கியது.
பெருமானின்
உறுதிமிக்க கரங்கள் என்னை தரையிறக்கியது.
”பெருமானே
நீயில்லாமல்…”
இடைமறித்த
பெருமான் ”நாளை முதல்…”
இடைமறித்த
நான் ” நீ வராவிட்டால் நிறுத்திவிடுகிறேன் நீயில்லாமல் இது எனக்கு வேண்டியதேயில்லை.
”இல்லை
உன்னுடனே வருகிறேன். மௌனமாக கேரியரில் அமர்ந்து. நான் இருப்பதை மறந்துவிடு. கூடவேதான் இருக்கிறேன் என்பதை மட்டும் வைத்துக்கொள்.
No comments:
Post a Comment