Sunday, June 9, 2019

ஒரு கும்பகர்ணனின் மங்கல் நினைவுகள் - 3


நாகூர்கனி, தாமு, மாணிக்கம், வேணுகோபால், தமிழ்  அய்ந்து பேரும் நானும் அன்று எங்கு போவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்ஒன்று ராமாவரம் எம்ஜிஆர் தோட்டதிற்கு அருகே அடையாறு ஆற்றுக்கு செல்வது குளித்துவிட்டு மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவது. மீன்பிடிப்பதில் சுடுவதில் நானும் ஈடுபட்டாலும் சாப்பிடுவது நண்பர்கள் மட்டும்.  தமிழ் ஆற்றுமீனை கைகளால் பிடிக்கும்  திறமை உள்ளவன் என்றாலும் மீன்பிடிக்க வேட்டி, சுடுவதற்கு தேவையான பொருட்கள் - ஓரு சிறிய பாட்டிலில் மண்ணெண்ணெய், ஒரு தீப்பெட்டி எடுத்து வருவான்எரிக்க சுள்ளி அங்கேயே பொறுக்கிக் கொள்ளவேண்டியதுஆனால் அன்று அவ்வளவு தூரம் போக வேண்டாம் என்றுதாமு சொன்னான்நடப்பதிலேயே  பாதிநாள் போய்விடும்போரூரில் இருந்து அந்த இடம் ஏழு கிலோமீட்டர் இருக்கும்அடுத்து பரிசீலிக்கப்பட்டது வேணுகோபாலின் மௌலிவாக்கம் நிலம், நெல் வயல்கள் கடந்து பம்பு-செட் கிணறுகிணற்றில் குளிக்க வேண்டியது வரும் வழியில் ஏதேனும் மாந்தோப்பில் வெற்றிகரமாக மாங்கா திருடி தப்பி வரவேண்டியதுஒருமுறை நானும் மாணிக்கமும் மட்டும் சைக்கிளில் மாங்கா திருடச் சென்றோம்வேலிக்கு வெளியே நான் சைக்கிள் பெடலில் கால்வைத்து தாயார்நிலையில் காத்திருக்க மாணிக்கம் வேலிக்கு அருகிலேயே உள்ளே இருந்த மரத்தில் ஏறி மாங்காய்கள் பறித்து பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தான்உயரமான ஒரு கிளையில் அவன் இருந்த நேரம் தோட்டக்காரன் வந்துவிட்டான்.  "தே ....பசங்களாஅவன் கற்களை வீச மரக்கிளையில் இருந்து "கும்பா" என்று கத்திக்கொண்டே வேலிதாண்டி குதித்து ஓடிவந்து கேரியரில் மாணிக்கம் ஏறிக்கொள்ள முழுவீச்சில் பெடல் அடித்தேன்பின்னால் பறந்து வந்த கற்கள் குறிதவறி எங்கோ சென்று விழுந்தனவேணுகோபால் நண்பர்களை அடிக்கடி கூட்டிவருவது அவன் மாமாவிற்கு பிடிக்கவில்லை என்பதால் அங்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டோம்போரூர் இரட்டை  ஏரி செல்வது என்று முடிவு செய்யப்பட்டதுஇரண்டு ஏரிகள், தெற்கே இருப்பது பெரியது வடக்கே இருப்பது சற்று சிறியது இரண்டுக்கும் நடுவே போரூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலைசென்னையின் புறவழி வட்ட சாலை அன்று அமைக்கப்பட்டிருக்கவில்லை, ஏரியின் குறுக்கே இன்று இருக்கும் பாலம் அப்போது இல்லைதெற்கே இருக்கும் ஏரியில் எப்போதும் நீர் இருக்கும்,.சில மாதங்கள் அதிகமாக சில மாதங்கள் குறைவாகவடக்கு ஏரியில் மிகவும் குறைவாக நீர் இருக்கும் அல்லது முற்றிலும் வறண்டு இருக்கும், அது மலம் கழிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டதுபிறகு குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு அதற்குமேல் மண்மூடி அதற்குமேல் இன்று பலமாடிக் கட்டிடங்கள் சில எழுந்துவிட்டன.  ஆபத்தானது என்று ஒரு கட்டிடத்தைக் காண்பித்து மணிகண்டன் சொன்னான்.  இறைவனின் வியத்தகு அருளால் அது காக்கப்படுகிறது அல்லது அவன் தண்டனைக்கு காத்திருக்கிறது.


சுட்டெரிக்கும் வெயிலில் ஏரியின் குளிர்ந்த நீரில் ஊறிக்கிடப்பது சுகமானதுதலையைச் சுடும் வெய்யிலிலிருந்து தப்ப நீருக்குள் மூழ்குவோம்நீர் மணலும் களிமண்ணும் கலந்தது...மண்ணின் நிறம் கொண்டது ...கண்ணாடி போன்றதல்லநீருக்குள் மூழ்கினால் ஒருவரை ஒருவர் காணமுடியாதுஏரியின் ஆழ்மான பகுதிகள் மாணிக்கத்திற்கு தெரியும்அவன் கடப்பாரை நீச்சலில் நிற்பான்நீச்சல் தெரியாத நண்பர்களை ஆழத்திற்கு வர விடமாட்டான் இழுத்து வந்துவிடுவான்வெய்யில் கடுமை குறைந்து அந்திசாயும்போது திரும்புவோம்இரட்டை ஏரி நீர் தன் தடத்தை உடம்பில் பதித்து இருக்கும்தன் கையை முகர்ந்து பார்த்துவிட்டு "வாசம் வருது" என்பான் நாகூர்.  "நாத்தம்ன்னு சொல்லு" என தாமு சொல்ல "அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்பேன் நான்.

No comments:

Post a Comment